அரசு கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 3-வது நாளாக போராட்டம்

கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 3-வது நாளாக போராட்டம்

Update: 2017-09-06 22:45 GMT
கிருஷ்ணகிரி,

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அரியலூர் மாணவி அனிதா மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்