நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவி அனிதா படித்த பள்ளியின் மாணவ- மாணவிகள், உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவி அனிதா படித்த பள்ளியில் பயின்ற மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-06 23:00 GMT
செந்துறை,

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத ஏக்கத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குழுமூர் மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

அந்த வகையில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலின் அதிகாரத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி குழுமூர் கிராமத்தில் அனிதா படித்த பிலோமினாள் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பள்ளி முன்பு உள்ள சாலையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திரளான பொதுமக்களும், கிராம மக்களும் கலந்து கொண்டனர். இவர்கள் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடை யூறும் இல்லாமல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்