மதன கோபாலசுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தாயார் சன்னதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதனை முன்னிட்டு உலக சுபிட்சத்திற்காகவும், ரிஷிகளின் அருளை பெறவேண்டியும் சிறப்பு ஹோமம் மற்றும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு ஹோமம் மற்றும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை லால்குடி மாந்துறை ராமகிருஷ்ணன் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதில் மாநில இணைச்செயலாளர் வக்கீல் சீனிவாசமூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்த நடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.நாரா யணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுபிக்ஷா சாமி நாதன், பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி நரசிம்மசாமி சன்னதிகளில் பருவமழை தவறாது பெய்யவேண்டியும், உலக சுபிட்சத்திற்காகவும் திருமஞ்சனம் நடந்தது. அபிஷேகம் மற்றும் தீபாராதனையை கோவில் பட்டாச் சாரியார் பட்டாபிராமன் நடத்தி வைத்தார்.