‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி திராவிட இயக்க தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரியும், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில்
சென்னை,
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சிங்கராயன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மகளிரணி நிர்வாகிகள் இன்பக்கனி, மணியம்மை ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுப.வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கிடையாது என்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி விடுத்திருக்கும் அறிவிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
மாணவி அனிதாவின் சாவுக்கு எம்.பி.பி.எஸ். ‘சீட்’ கிடைக்காதது தான் காரணமா? என்றும், அவரது மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் தகுதியற்ற மதிப்பெண்களை கொண்டு மட்டும் அவரது மகளுக்கு எப்படி எம்.பி.பி.எஸ். ‘சீட்’ கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும். மத்தியில் நடப்பது மோடி ஆட்சி அல்ல, மோசடி ஆட்சி. தமிழகத்தில் நடப்பது கையாளாகாத ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.