விருகம்பாக்கத்தில் வி‌ஷ ஊசி போட்டு மகன்–மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையும் சாவு

விருகம்பாக்கம், ஆற்காடு சாலை, சாலிகிராமம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்திரசேகர்(வயது42). இவருக்கு மீனாட்சி(9) என்ற மகளும், ரிஷிகேஷ்(6), என்ற மகனும் இருந்தனர்.

Update: 2017-09-06 22:45 GMT

பூந்தமல்லி,

கடந்த மாதம் 28–ந்தேதி வீட்டில் 3 பேரும் மயங்கி கிடந்தனர். இதில் மீனாட்சி, ரிஷிகேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போய் இருந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சந்திரசேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி நேற்று சந்திரசேகர் பரிதாபமாக இறந்து போனார். விருகம்பாக்கம் போலீசார் சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்திரசேகரின் மனைவி ஜோதி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சந்திரசேகரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வந்த சந்திரசேகர் தனது 2 குழந்தைகளுக்கு வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு தானும் வி‌ஷ ஊசியை போட்டுக்கொண்டதில் அவரும் இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்