சேலத்தில் கண்தானத்தை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஊர்வலம்
சேலத்தில் கண்தானத்தை வலியுறுத்தி, மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில், கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கலெக்டர் ரோகிணி, மாணவ-மாணவிகளுடன் ஊர்வலமாக சென்றார்.
சேலம்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் தான இருவார விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.
இதில் பங்கேற்ற கலெக்டர் ரோகிணி கண்களில் கருப்புத்துணி கட்டியவாறு ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறிது தூரம் நடந்து சென்றார். ஊர்வலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கனகராஜ், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் சோழமாதேவி, அகர்வால் கண் ஆஸ்பத்திரி சேவை பிரிவு தலைவர் டாக்டர் கற்பகவள்ளி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வல முடிவில் கலெக்டர் ரோகிணி தெரிவித்ததாவது:-
இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர். மேலும் ஆண்டிற்கு 20 ஆயிரம் பேர் கூடுதலாக கருவிழி பாதிப்பினால் பார்வை இழக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டில் 82 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. கருவிழி மாற்று அறுவை சிகிச்சை 51 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கண்தானம் செய்வதற்காக இதுவரை 156 பேர் பதிவு செய்துள்ளனர்.
அதிக அளவில் இளம் வயதினர் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்து இருக்கின்றனர். இளம் வயதினர் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் நீண்ட நாள் பயனுள்ள வாழ்க்கை வாழ பொதுமக்களிடையே இது போன்ற கண்தான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று காலை முதல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆய்வின்போது மணக்காட்டில் உள்ள சேலம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்களிடம் கையில் பூங்கொத்தை கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்ததுடன், மென்மேலும் ஆசிரியர் பணியை சிறப்பாக மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
அதைசற்றும் எதிர்பாராத வகுப்பு ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களை பெருமை படுத்தும் விதமாக தங்கள் வகுப்பறைக்கே வந்து வாழ்த்து தெரிவித்த கலெக்டர் ரோகிணிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் ஆசிரியர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்ட பின் அங்கிருந்த மாணவிகளிடம், சிறப்பாக கல்வி பயில வேண்டியதன் அவசியத்தை சிறிது நேரம் எடுத்துக் கூறி விடைபெற்றார்.