பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காசநோய் துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வேலூரில் ரூ.34¾ லட்சம் கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் வீட்டில் நேற்று லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்ட காசநோய்பிரிவு துணை இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜாசிவானந்தம். இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக இந்த பணியில் இருந்தார். அப்போது காசநோய் ஒழிப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். இதற்காக அவர் தற்காலிக பணியாளர்களை நியமித்திருந்தார்.
இவர்கள் பணிசெய்ததற்கான ஆவணங்களை தயாரித்து ராஜாசிவானந்தம் காசநோய் துறைக்கு அனுப்புவார். அதன்பேரில் அவர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கப்படும். இந்த நிலையில் 2 டாக்டர்கள் உள்பட 19 தற்காலிக பணியாளர்களை பணியில் இருந்து துணை இயக்குனர் ராஜாசிவானந்தம் நிறுத்தி விட்டார்.
ஆனாலும் நிறுத்தப்பட்ட அவர்கள் பணியில் இருப்பதுபோன்று போலியான ஆவணங்களை தயாரித்து அதற்கான சம்பளத்தை பெற்று வந்துள்ளார். அவர்கள் பெயரில் வரும் சம்பளம் முழுவதையும் தனது அலுவலகத்தில் பணிபுரிந்த 2 பேரின் வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 1.4.2014 முதல் 30.9.2015 வரையிலான காலக் கட்டத்தில் 2 டாக்டர்கள் உள்பட 19 தற்காலிக பணி யாளர்கள் பெயரில் ரூ.34¾ லட்சம் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. பணியில் இருந்து நிறுத்தப்பட்ட பணியாளர்கள் பெயரில் வரும் சம்பளத்தை தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ரமேஷ் மற்றும் ஸ்ரீதர் என்பவருடைய மனைவி ஆகியோரின் வங்கி கணக்கிற்கு மாற்றி பணத்தை எடுத்துள்ளார்.
இதுகுறித்து துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் துணை இயக்குனர் ராஜாசிவானந்தம் ஓய்வுபெற இருந்த நேரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் திரு நாவுக்கரசு, அசோகன், விஜயலட்சுமி மற்றும் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணை இயக்குனர் ராஜாசிவானந்தம் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அதே நேரத்தில் சத்துவாச்சாரியில் உள்ள ரமேஷ் வீடு, தொரப்பாடி போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீதர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப் பட்டது. அப்போது ராஜாசிவானந்தம் வீட்டில் அவருடைய பெயரில் 6 வங்கி பாஸ்புத்தகங்கள் இருந்தன. அதை போலீசார் கைப்பற்றினர். இந்த ஆய்வின்போது ஒருவர் கணக்கில் இருந்து மற்றொருவர் கணக்கிற்கு எப்படி பணம் மாற்றப்பட்டது என்பது குறித்து பாஸ்புத்தகங்களை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போலி பில்கள் மூலம் செலவு கணக்குகள் எழுதி பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதன் மூலம் மொத்தம் ரூ.34 லட்சத்து 84 ஆயிரம் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது மாலை 5 மணி வரை நீடித்தது. முடிவில் துணை இயக்குனர் ராஜாசிவானந்தத்தின் வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கி வைத்துள்ளனர். ராஜாசிவானந்தத்திற்கு உடந்தையாக இருந்த ஸ்ரீதர், தற்போது வேலூர் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராகவும், ரமேஷ் வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.