பழனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழனி குளத்து பை–பாஸ் ரோடு ரவுண்டானா முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி பழனி நகர கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி,
பழனி குளத்து பை–பாஸ் ரோடு ரவுண்டானா முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி பழனி நகர கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம் வரவேற்றார். தலைவர் காஜாமைதீன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டனர்.