சென்னையில் பயிற்சி டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அனிதாவுக்கு அஞ்சலி

எம்.பி.பி.எஸ். ‘சீட்’ கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

Update: 2017-09-05 23:15 GMT
சென்னை,

சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் பட்ட மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர்.

மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து அனிதாவின் உருவப்படத்துடன் ஊர்வலமாக வந்த பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி நுழைவுவாயில் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உருவப்படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் அருள், நன்மாறன், கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், “மாணவி அனிதாவின் உயிரிழப்பு மருத்துவத்துறையை சேர்ந்த அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது இந்த அரசு திருந்தவேண்டும். ‘நீட்’ தேர்வில் முழுமையான விலக்கு பெறுவதே, அனிதாவின் மரணத்துக்கு கிடைக்கும் உரிய நீதியாகும்”, என்று குறிப்பிட்டனர்.

மேலும் செய்திகள்