சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குட்கா புகையிலை பொருளுடன் சபைக்கு வந்தனர்.
இதையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சட்டசபையின் உரிமை குழு கூடி எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில் அளிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து 8 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செயலகத்திற்கு சென்றனர். அங்கு சபாநாயகர் இல்லாததால் சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கொடுத்தனர்.அதில், உரிமை குழு நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது;-
எம்.எல்.ஏ-க்களின் கருத்துரிமையை பறிக்கும் வகையில் சபாநாயகர் செயல்படுகிறார். அரசியல் சாசனத்திற்கு எதிராக உரிமைக்குழு நடைபெறுகிறது. திமுக எம்.எல்.ஏ.க்களை நீக்கிவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க அரசு முயற்சிப்பதாக கூறப்பட்டு உள்ளது.