மாணவி அனிதா தற்கொலை: பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம், பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கல்லூரி நுழைவு வாசல் அருகில் வரிசையாக அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இந்த போராட்டங்களால் நேற்று மாலை ஒட்டுமொத்த மாணவர்களும் வ.உ.சி. திடலில் கூட இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி வ.உ.சி. திடலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதவிர புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நெல்லை டவுன் வாகையடி முக்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மத்திய பொது பட்டியலில் இருந்து நீக்கி, மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட அமைப்பாளர் சுந்தரராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ், ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், புரட்சிகர இளைஞர் முன்னணி பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் மரியகுழந்தை, சுதர்சன், ரமேஷ் ஆறுமுக பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.