மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்து சென்னை என்ஜினீயரிங் மாணவர்-தாய் உள்பட 4 பேர் பலி
திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் சென்னை என்ஜினீயரிங் மாணவர்-தாய் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டிவனம்,
காஞ்சீபுரம் மாவட்டம் போவூர் மகாத்மாகாந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அமுதா (வயது 45). மகன் ராஜேஷ்குமார் (21). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
அமுதாவின் தங்கையான உஷா என்பவர் இறந்ததை தொடர்ந்து அவரது மகள் புனிதா (8), மகன் விஜயன் (7) ஆகியோரையும் அமுதா வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள கொஞ்சிமங்கலத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அமுதா, ராஜேஷ்குமார், புனிதா, விஜயன் ஆகிய 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றனர்.
பின்பு திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை அதே மோட்டார் சைக்கிளில் போவூருக்கு புறப்பட்டு வந்தனர்.
மோட்டார் சைக்கிளை ராஜேஷ்குமார் ஓட்டினார். திண்டிவனம் சாரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேஷ்குமார், புனிதா, விஜயன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அமுதாவை ஒலக்கூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு இருந்த டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலே அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த அமுதாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.
இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.