மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு கிராம மக்கள், மாணவர்கள் மறியல்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் மடுகரையில் கிராம மக்கள், மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெட்டப்பாக்கம்,
நீட் தேர்வால் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரை கிராம மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக திடீரென போராட்டத்தில் குதித்தனர். மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த சுமார் 50 பேர் மாணவிகள், அனிதா உருவப்படம் அச்சிடப்பட்ட சுவரொட்டியுடன் வந்து நேற்று காலை 10.45 மணி அளவில் மடுகரை மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் மடுகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கைக்காக கலிதீர்த்தாள்குப்பத்தில் அரசு காமராஜர் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புதுச்சேரி-விழுப்புரம் மெயின் ரோட்டில் மதகடிப்பட்டு சந்திப்பு அருகே வந்தனர்.
அங்குள்ள காமராஜர் நினைவு தூண் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங் களை எழுப்பினார்கள்.
தொடர்ந்து அவர்கள் மதகடிப்பட்டு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி - விழுப்புரம் மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் கல்லூரிக்கு திரும்பிச் சென்றனர்.