நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தஞ்சையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-04 23:15 GMT

தஞ்சாவூர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தஞ்சையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு– புதுச்சேரி வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இதில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு தமிழகத்திற்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். நீதிபதிகள் தேர்வில் ஒருங்கிணைந்த தேர்வு முறையான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் வக்கீல்கள் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆற்றுப்பாலம், காந்திஜிசாலை, அண்ணாசிலை வழியாக பழைய பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து திடீரென மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்