அப்துல் கலாம் நினைவிடம் அருகில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக்கூடாது
கோவையைச் சேர்ந்த வக்கீல் வெண்ணிலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ராமேசுவரம் கோவிலில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கடலில் நேரடியாக கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்ட;
மதுரை,
கோவையைச் சேர்ந்த வக்கீல் வெண்ணிலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ராமேசுவரம் கோவிலில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கடலில் நேரடியாக கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், “ராமேசுவரம் நகராட்சி மற்றும் அப்துல்கலாம் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க கூடாது. ராமேசுவரம் பகுதியில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் விடுதிகள், நகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யாமல் நேரடியாக கடலில் விட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் பாலத்தில் மின் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 13–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.