செங்குன்றத்தில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் துணிகள் கொள்ளை

செங்குன்றத்தில் ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-09-04 22:30 GMT
செங்குன்றம்,

சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்(வயது 32). இவர் செங்குன்றத்தில் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாா.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மொய்தீன் செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த நெடுஞ்சாலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்