மாதவரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு டிரைவர் கைது

மாதவரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-09-03 20:30 GMT

செங்குன்றம்,

மாதவரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில்...

சென்னையை அடுத்த மாதவரம் உடையார்தோட்டம் 6–வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23).

இவர் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் மாதவரம் பால்பண்ணையில் இருந்து அசிசி நகர் வழியாக மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தண்ணீர் லாரி மோதியது

அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் தண்ணீர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அசிசி நகர் தனியார் கல்லூரி அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர், அரியலூரை அடுத்த அங்கராயநல்லூரைச் சேர்ந்த மணிபாரதி (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்