தாம்பரத்தில் ஓடும் காரில் தீப்பற்றியதால் பரபரப்பு 5 பேர் உயிர் தப்பினர்

சென்னை குரோம்பேட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா (வயது 42). ஊரப்பாக்கத்தில் உள்ள தன் நண்பர் வீட்டுக்கு நேற்று அவர் காரில் குடும்பத்தினருடன் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

Update: 2017-09-03 21:00 GMT

தாம்பரம்,

சென்னை குரோம்பேட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா (வயது 42). ஊரப்பாக்கத்தில் உள்ள தன் நண்பர் வீட்டுக்கு நேற்று அவர் காரில் குடும்பத்தினருடன் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகே இரவு வந்த போது திடீரென காரில் புகை வந்தது. உடனே இப்ராகிம்ஷா உள்பட காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கினர்.

சற்று நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்தது. இது தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகை வந்த உடனேயே 5 பேரும் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்