மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு சென்னையில் பல்வேறு அமைப்பினர் 2-வது நாளாக போராட்டம்
அரியலூர் மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு சென்னையில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
அரியலூர் மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு சென்னையில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி மெரினாவில் தொடர்ந்து போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அனிதா தற்கொலை
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அவரது சாவுக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
சென்னையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதுகுடிப்போர் சங்கம், தமிழ்நாடு மாணவர்- இளையோர் கூட்டமைப்பு, திராவிட விடுதலை கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி, மாணவர் சங்கம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
போராட்டங்கள்
இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகி வளவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
புரட்சி பாரதம் சார்பில் அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.
சாலை மறியல்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் அருகே தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த சுமார் 20 பேர் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். இந்த தகவல் அறிந்த போலீசார் முன்கூட்டியே அவர்களை வழிமறித்து, கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகில் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி மாணவர்களும் திரளாக பங்கேற்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கீழ்ப்பாக்கம் செனாய்நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கதிரவன் தலைமையில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயம் அருகே நேற்று முன்தினம் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதின் எதிரொலியாக, அங்கு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை மே-17 இயக்கத்தை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இயக்க நிர்வாகி பிரவீன் தலைமையில் ஒன்றுகூடி முற்றுகையிட்டனர். பின்னர் மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர் இதனைத்தொடர்ந்து அவர்களை பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் கைது செய்தனர்.
இதேபோல மாணவர் புரட்சி இயக்கம், நீலம், தமிழ்நாடு மாணவர்-இளையோர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நல கூட்டத்தில் அடைத்தனர்.
சென்னையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கைதானவர்கள் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
மெரினாவில் பாதுகாப்பு நீட்டிப்பு
மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் மெரினா போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் ஒரு போராட்டம் நடைபெற விட்டுவிடக்கூடாது என்பதில் போலீசார் உஷாராக இருக்கிறார்கள். அந்தவகையில் மெரினாவில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர விடுமுறையில் சென்ற போலீசாரையும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட சிறப்பு பிரிவு போலீசாரையும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மெரினா உழைப்பாளர் சிலை அருகே நிரந்தர காவல் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரைக்கு வருவோரிடம் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்படும் பட்சத்தில் இக்குழுவினர் அவர்களை விசாரித்து அனுப்புகின்றனர். எனவே உச்சகட்ட பாதுகாப்பில் மெரினா கடற்கரை தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆலந்தூர் பகுதி அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. திமுக பகுதி செயலாளர் பி.குணாளன், காங்கிரஸ் மண்டல தலைவர் நாஞ்சில் பிரசாத், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் பிலால் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஊர்வலமாக சென்று அனிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பகுதி செயலாளர் சீராளன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் பேராட்டத்தில் ஈடுப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் வந்து பேசினார்கள். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று பரங்கிமலை சுரங்கப்பாதை அருகே கோஷங்களை எழுப்பிவிட்டு சென்றனர்.