முன்விரோதத்தில் வாலிபர் கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்வர்தீன்.

Update: 2017-09-03 22:00 GMT

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்வர்தீன். இவரது மகன் முகமது ரபீக்(வயது 26). இரும்பு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் முகமது ரபீக், தனது நண்பர்கள் சிலருடன் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது மூர்த்தியும் அங்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, மரக்கட்டையால் முகமது ரபீக்கை தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்