வள்ளியூர் பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
வள்ளியூர்,
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுந்தர பரிபூரண பெருமாள்நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மாதம் நடக்கும் தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.
அதன்படி இந்தாண்டு தேரோட்ட திருவிழா கடந்த 25–ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலாவும் நடந்தது.
ஆவணி தேரோட்டம்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று நடந்தது. காலை 10.35 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ரத வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பெருமாள் பக்தர்கள் குழு மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.