நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ராமேசுவரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-09-03 22:45 GMT

ராமேசுவரம்,

அரியலூர் மாவட்ட மாணவி அனிதா நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் இறப்புக்கு மத்திய–மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் மணிகண்டன், தலைவர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கருணமூர்த்தி, கருணாகரன், சிவா, தர்மன், மாதர் சங்க நிர்வாகிகள் நிர்மலா லட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவி அனிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் லோகநாதன் உள்பட ஏராளமான பேலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்