உலகின் பாதிச் சொத்து 8 பேரிடம் உள்ளது
நாம் 500 ரூபாய்க்கும், 1,000 ரூபாய்க் கும் அல்லாடுகிறோம். ஆனால், உலகின் பாதிச் சொத்து வெறும் 8 பேரிடம் தான் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளது.
நாம் 500 ரூபாய்க்கும், 1,000 ரூபாய்க் கும் அல்லாடுகிறோம். ஆனால், உலகின் பாதிச் சொத்து வெறும் 8 பேரிடம் தான் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளது. சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஆக்ஸ்போம் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எட்டு நபர்களை பொறுத்ததே என்றும், உலகின் 50 சதவீத சொத்து அந்த எட்டு பேரிடமும் இருப்பதாகவும் அந்த அமைப்பு சொல்லி இருக்கிறது.
ஆக்ஸ்போம் அறிக்கையின்படி, உலகப் பொருளாதாரத்தை ஆளும் அந்த எட்டு மெகா பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி; ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 64).
அமென்ஷியோ ஒர்டேகா (ஸ்பெயின் தொழில் அதிபர்) 67 பில்லியன் அமெரிக்க டாலர், வாரன் பபெட் (அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர்) 60.8 பில்லியன் அமெரிக்க டாலர், கார்லோஸ் ஸ்லிம் ஹெலு (மெக்சிகோ தொழிலதிபர்) 50 பில்லியன் அமெரிக்க டாலர், ஜெப் பெஜோஸ் (அமேசான் டாட்காம் நிறுவனர்) 45.2 பில்லியன் அமெரிக்க டாலர், மார்க் சக்கர்பெர்க் (பேஸ்புக் நிறுவனர்) 44.6 பில்லியன் அமெரிக்க டாலர், லேரி எலிசன் (ஆரக்கிள் நிறுவனர்) 43.6 பில்லியன் அமெரிக்க டாலர், மைக்கேல் ப்ளூம்பெர்க் (தொழிலதிபர்) 40 பில்லியன் டாலர்.
உலக அளவில் தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால், ரஷியாவில் தான் அதிக அளவில் சமநிலையற்ற போக்கு நிலவுவதாக ஆக்ஸ்போம் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷியாவின் 74.5 சதவீத பொருளாதார வளர்ச்சியினை 1 சதவீதத்தினர் மட்டுமே உள்ள ரஷிய செல்வந்தர்கள் மட்டும் அனுபவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த செல்வத்தின் 42.1 சதவீதம், 1 சதவீத அமெரிக்க செல்வந்தர்களிடம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 58 சதவீத செல்வம் 1 சதவீத செல்வந்தர்களிடம் இருக்கிறது. இந்தநிலை மாறி ஒரே விதமான வளர்ச்சி ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.