மாணவி அனிதா தற்கொலை: நெல்லையில் சாலை மறியல்-ஒப்பாரி போராட்டம்
மாணவி அனிதா தற்கொலையை தொடர்ந்து நெல்லையில் சாலை மறியல் மற்றும் ஒப்பாரி போராட்டங்களில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததால், அரியலூர் மாவட்டத்தில் மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி நெல்லையில் நேற்று முன்தினம் மாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சாதிய, மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று 2-வது நாளாக நெல்லையில் போராட்டங்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலில் அந்த கட்சியினர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மெயின் ரோட்டுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் வேனில் அழைத்துச் சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தமிழ் ஆர்வலர்கள் சிலர் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி நூற்றாண்டு மைதானம் எதிரே, ரோட்டோரத்தில் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். சில மாணவ-மாணவிகள் பிணம் போல் கழுத்தில் மாலை அணிந்த நிலையில் தரையில் படுத்திருந்தனர். அருகில் ஒரு மண் பானையும் வைத்து ஒப்பாரி வைத்தனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இந்திரா குயிலி நாச்சியார் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசார், அந்த அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க பாண்டியன், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜபூபதி (வயது 33) உள்பட 13 பேரை கைது செய்தனர். ரோட்டில் படுத்த அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.
பின்னர் அவர்களை போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்க வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது சிவராஜ பூபதிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக நிர்வாகிகள் அவரை, சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவராஜ பூபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை போலீசார் கைது செய்த போது தாக்கினர். இதில் சிவராஜ பூபதி மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு போலீசாரே பொறுப்பு” என்றனர்.
நெல்லையில் நேற்று 3 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மொத்தம் 68 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தி.மு.க. சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெரு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவி அனிதா உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் தலைமை தாங்கினார். மாநகர பிரதிநிதி சண்முகசுந்தரம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில், அனிதா உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ரவி தேவேந்திரன், மாநகர மாவட்ட செயலாளர் பொட்டல் கண்ணன், பொருளாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையில் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருவதால், பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு குவிந்தது போல் ஒன்று சேரக்கூடும் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி வ.உ.சி. திடல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.