வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.37 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த வேலைக்கார வாலிபரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-09-02 22:42 GMT

மும்பை,

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.37 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த வேலைக்கார வாலிபரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைக்கார வாலிபர்

மும்பை கார் பகுதியை சேர்ந்தவர் சந்தன் (வயது70). இவரது மனைவி கவுசல்யா (66). இந்த தம்பதி குடும்பத்துடன் அங்குள்ள மாருமால் மென்சன் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 7–வது மாடியில் வசித்து வருகின்றனர். இவரது வீட்டில் ராஜூ (26) என்ற வாலிபர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

கட்டிட காவலாளி அறையில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அவர் சந்தனின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கவுசல்யா தவிர மற்ற அனைவரும் வெளியே சென்றிருந்தனர்.

நகை, பணம் கொள்ளை

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராஜூ தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கவுசல்யாவை சத்தம் போட்டால் சுட்டு விடுவேன் என மிரட்டி கயிற்றால் கட்டி போட்டார். பின்னர் அவரிடம் இருந்து பீரோ சாவியை வாங்கி அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

அவற்றின் மதிப்பு ரூ.37 லட்சம் ஆகும். இந்த நிலையில், தானே கயிற்றை அவிழ்த்த கவுசல்யா சம்பவம் குறித்து போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார வாலிபர் ராஜூவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்