கல்வித்தரத்தை உயர்த்த கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது

கல்வித்தரத்தை உயர்த்த கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-03 00:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித் தரத்தை உயர்த்த சிறந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழு பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை, மாணவர்களின் நிலை குறித்து தகவல்களை பெற்று வருகிறது. புதுச்சேரியின் கல்வியின் தரம் அகில இந்திய அளவில் சிறந்த இடத்தில் உள்ளது.

மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி அளித்து வருகிறோம். கடந்த ஆண்டு அளித்த பயிற்சியில் 30 பேர் தேர்ச்சி பெற்றனர். இலவச அரிசிக்காக ஆண்டிற்கு ரூ.262 கோடி அரசு செலவு செய்கிறது. புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள 1.40 லட்சம் குடும்பத்தினர் இலவச அரிசியை வேண்டாம் என விட்டு கொடுத்தால் அரசுக்கு ரூ.100 கோடி மிச்சமாகும். அந்த நிதியை வேறு திட்டங்களுக்கு செலவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்