மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தற்கொலை செய்த மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.;

Update: 2017-09-02 23:00 GMT
செந்துறை,

தற்கொலை செய்த மாணவி அனிதாவின் உடல் அவருடைய சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் நேற்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு 10 மணிக்கு குழுமூர் வந்தார். பின்னர் மாணவி அனிதாவின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மாணவியின் தந்தை சண்முகம் மற்றும் சகோதரர்கள், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களிடம் தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் மாணவி அனிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்