பரமேஸ்வருடன் எந்த மோதலும் இல்லை முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ததில் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் பரமேஸ்வருக்கும் இடையே மோதல் உருவாகி இருப்பதாக தகவல் வெளியானது.

Update: 2017-09-02 20:45 GMT

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ததில் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் பரமேஸ்வருக்கும் இடையே மோதல் உருவாகி இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:–

மந்திரிகள் பதவி ஏற்கும் விழா நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நடந்தபோது மாநில தலைவர் பரமேஸ்வர் டெல்லிக்கு சென்றிருந்தார். இதனால் அவரால் மந்திரிகள் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

அவர் பெங்களூருவில் இருந்திருந்தால் கட்டாயம் கலந்து கொண்டு இருப்பார். மந்திரிசபை விரிவாக்கம் செய்ததில் எனக்கும், பரமேஸ்வருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக நீங்கள் (நிருபர்கள்) தான் சொல்கிறீர்கள். ஆனால் பரமேஸ்வருடன், எனக்கு கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.

பரமேஸ்வர் கட்சி அலுவலகத்திற்கு வராது பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது. அதனை அவரிடம் தான் கேட்க வேண்டும். போலீஸ் மந்திரியாக ராமலிங்க ரெட்டியை நியமிப்பது தொடர்பாக அனைவருடனும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்