சீர்காழியில் மாரத்தான் போட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சீர்காழியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
சீர்காழி,
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி சீர்காழி சட்டநாதபுரம் கைக்காட்டி ரவுண்டானாவில் இருந்தும், மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் தொடங்கியது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் தென்பாதி, கச்சேரிரோடு, அரசு மருத்துவமனை சாலை, கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, தாடாளன் கோவில், விளந்திடசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சென்று சேந்தங்குடி ரெயில்வே மேம்பாலத்தை அடைந்தனர். இதில் 3 ஆயிரம் மாணவி- மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நாகையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தற்போது போட்டி தூரத்தை கடந்த அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், ராஜமாணிக்கம், பேரூர் செயலாளர் போகர்ரவி, மாணவர் அணி துணை செயலாளர் ரமேஷ்பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நற்குணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.