‘கான்டாக்ட் லென்ஸ்’... கவனம்!

தற்போது பலரும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கும், அழகுக்காகவும் ‘கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்து வருகின்றனர்.

Update: 2017-09-02 10:30 GMT
ற்போது பலரும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கும், அழகுக்காகவும் ‘கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்து வருகின்றனர்.

பார்வைக் குறைபாட்டுக்காக என்றாலும் சரி, பேஷனுக்காக என்றாலும் சரி, கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் பாதிப்பு ஏற்படலாம்.

கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது மீண்டும் மீண்டும் கழற்றி அணிவதால் விழிவெண் படலம் பாதிக்கப்படலாம்.

தற்போது பலரும் தரம் குறைந்த கன்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், கான்டாக்ட் லென்ஸ் அணிவதால் தாம் ஏதாவது ஒரு கண் நோய்த் தொற்றுக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளனர்.

கான்டாக்ட் லென்களின் தரம், அவற்றைப் பயன்படுத்தும் விதம் சரியாக இல்லாதபோது, அவை நீண்டகாலப் பாதிப்புகளையும் ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது.

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் ஐந்து பேரில் ஒருவருக்கு விழிவெண்படல பாதிப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தரமான கான்டாக்ட் லென்ஸ்களை கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று வாங்கி அணிய வேண்டும். சரியான முறைப்படி அவற்றைப் பராமரிக்கவும், பயன்படுத்தவும் வேண்டும்.

கான்டாக் லென்ஸ் அணிவதில் ஆர்வமுள்ளவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்