தூத்துக்குடியில், 20 மாதங்களுக்கு பிறகு கனமழையால் மக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடியில் 20 மாதங்களுக்கு பிறகு நேற்று 63 மில்லி மீட்டர் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் வறட்சி நீங்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. தாமிரபரணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 63 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கடந்த 20 மாதங்களாக மழை இன்றி தவித்த தூத்துக்குடி மக்கள், இந்த கனமழையால் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. அதே நேரத்தில் லேசான காற்றும் வீசியது. அப்போது தேவகிநகர் பகுதியில் உள்ள 2 மரங்கள் வேரோடு சரிந்தன. இதில் ஒரு மரம் அருகில் நின்ற ஆட்டோ மீது சரிந்து விழுந்தது. இதனால் அந்த ஆட்டோ சேதம் அடைந்தது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-
தூத்துக்குடி - 63
கடம்பூர் - 44
கயத்தாறு - 42
காடல்குடி - 33
விளாத்திகுளம் - 25
எட்டயபுரம் - 22
வேடநத்தம் - 20
கோவில்பட்டி - 18
வைப்பார் - 11
கழுகுமலை - 10
சூரங்குடி - 7
ஓட்டப்பிடாரம் - 4
கீழஅரசடி - 3
சாத்தான்குளம் - 1