பிறந்தநாளையொட்டி பூலித்தேவன் சிலைக்கு, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாசுதேவநல்லூர்,
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் பூலித்தேவனின் குலதெய்வமான உள்ளமுடையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர். பின்னர் பூலித்தேவனின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோமதி முத்துராணி துரைச்சி குடும்பத்தினர் சிவகுமாரசாமித்துரை, சிபி உள்ளமுடையார்துரை, பாண்டியராஜா மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் மாமன்னர் பூலித்தேவனின் சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி, பாஸ்கரன், கலெக்டர் சந்தீப் நந்தூரி, மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், ராஜகண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, திசையன்விளை நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விஜிலா சத்யானந்த் எம்.பி, சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், ஆர்.பி.ஆதித்தன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பொன்முத்துவேல்சாமி, சிவகிரி நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், புளியங்குடி நகர செயலாளர் சங்கரபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பலர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனர் எ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் துணைச்செயலாளர் வாசுசெல்வம், தலைமை நிலைய செயலாளர் நயினார் பாண்டியன், மாநில இளைஞர் அணிச்செயலாளர் எஸ்.பி.ராஜ்மோகன், கொள்கை பரப்பு செயலாளர் கணேசன், மாநில இணைச்செயலாளர் பட்டன், மாநில விவசாய அணி தலைவர் கே.கே.கருப்பையா உள்பட பலர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்தனர். 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் பூலித்தேவனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.