‘நீட்’ தேர்வுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி தற்கொலை
தமிழ்நாட்டில் இதுவரை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வந்தது.
செந்துறை,
ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) நடத்தப்பட்டது. தமிழக அரசு, அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இதனால் பிளஸ்-2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று இருந்தபோதிலும், நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாததால் ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவைச் சேர்ந்த மாணவி அனிதா (வயது 17). தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் பிளஸ்-2 தேர்வில் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ படிப்புக்கான இவரது கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். நீட் தேர்வை எழுதிய இவருக்கு அதில் 700-க்கு 86 மதிப்பெண்களே கிடைத்தது.
அனிதாவின் தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக உள்ளார். மணிரத்னம், சதீஷ்குமார், பாண்டியன், அருண்குமார் என்ற 4 சகோதரர்கள் உள்ளனர். தாயார் ஆனந்தி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கோரி அனிதாவும், மேலும் சில மாணவ-மாணவிகளும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
மாநில பாட திட்டத்தில் படித்த கிராமப்புற மாணவியான அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்றதால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் அவரது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்தது. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படித்து டாக்டர் ஆக முடியவில்லையே என்ற கவலை அனிதாவை வாட்டியது.
டாக்டர் ஆகும் தனது லட்சியம் நீட் தேர்வால் தடைபட்டுவிட்டதாக உறவினர்களிடமும், சக தோழிகளிடமும் கூறி அனிதா வேதனைப்பட்டார். கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர், வேலைக்கு சென்று இருந்த அவரது தந்தை சண்முகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி துடித்தார். அங்கு கூடி இருந்த உறவினர்களும் அனிதாவுக்கு ஏற்பட்ட முடிவை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதனர். துயரம் தாங்காமல் கதறி துடித்த அனிதாவின் தந்தைக்கும், சகோதரர்களுக்கும் உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினார்கள்.
அரியலூர் மாணவி அனிதாவின் டாக்டர் கனவுக்கு எமனாக நீட் தேர்வு அமைந்துவிட்டதாகவும், எனவே நீட் தேர்வினால் வேறு தமிழக மாணவ, மாணவிகள் இனியும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனிதாவின் நெருங்கிய தோழிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் போக்கை கண்டித்தும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று (சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்த அரியலூர் மாவட்ட வணிகர்கள் முடிவு எடுத்துள்ளனர். இதற்கு தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்கொலை செய்த மாணவி அனிதாவின் உடல் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தலைமை மருத்துவர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
அரியலூர் மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊரான குழுமூருக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அஞ்சலி செலுத்துவதற்காக திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஒரே நேரத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் அரியலூருக்கு வருகை தர இருப்பதால் போலீசார் அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனிதாவின் உடல் கொண்டு வரப்பட்டதை அறிந்ததும், அங்கு அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் சென்றனர். அப்போது அங்கு சோகத்துடன் நின்று கொண்டிருந்த மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவி அனிதாவின் உடலை பார்க்க அவர்களை உள்ளே விடாமல் கோஷம் எழுப்பினர். அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் மவுனமே மாணவி அனிதாவின் மரணத்திற்கு ஒரு வகையில் காரணமாகிவிட்டது என்று கூறினர். பின்னர் உறவினர்கள் உள்ளிட்டோர் நீட் தேர்வு விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.
பின்னர் நீட் தேர்வை கண்டித்து அரியலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு காங்கிரஸ் கட்சியினர் தர்ணா செய்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை நடப்பதையொட்டி ஆஸ்பத்திரி வளாகத்திலேயே மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.