திருச்சி பாலக்கரையில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
திருச்சி பாலக்கரையில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் வல்லவராஜ்(வயது 57). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ஜெர்லி(54). இந்த தம்பதிக்கு டேனியல்(25) என்கிற மகனும், ஷாமிலி(23) என்கிற மகளும் உள்ளனர். வல்லவராஜ் தற்போது வீட்டின் முன்புறம் செல்போன்களுக்கு ரிசார்ஜ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். டேனியல் ஜெர்மன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஷாமிலி சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் வீட்டில் வல்லவராஜும், ஜெர்லியும் மட்டும் வசித்து வந்தனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜெர்லியை சிகிச்சைக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சேர்க்க வல்லவராஜ் அழைத்து சென்றார். இதையொட்டி வீட்டை பூட்டி விட்டு, சாவியை அப்பகுதியில் வசிக்கும் தனது பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றார். மேலும் அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை கூடவே இருந்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வல்லவராஜின் தாய் அம்புரோஸ் அருகே உள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வல்லவராஜ் வீட்டு கதவில் பூட்டு இல்லை. இதனால் அவர் சிகிச்சை முடிந்து மனைவியை அழைத்து கொண்டு சென்னையில் இருந்து திரும்பி வந்திருக்கலாம் என்று நினைத்த, அவரை பார்க்க அம்புரோஸ் சென்றார்.
ஆனால் வீட்டின் கீழ் தளத்தில் யாரும் இல்லாததால் முதல்மாடிக்கு சென்று பார்த்தார். அங்கும் யாரும் இல்லை. ஆனால் மேலே உள்ள ஒரு அறையின் கதவுகள் திறந்து கிடந்தன. அந்த அறையில் இருந்த பீரோவின் கதவுகளும் திறந்து கிடந்தன. அம்புரோஸ் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நகை இருந்த பெட்டிகள் அனைத்தும் கட்டிலில் சிதறி கிடந்தன. மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக அம்புரோஸ் தனது கணவர் ஜேம்ஸ் சவரிநாதனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து அவர் பாலக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வல்லவராஜுக்கு தகவல் தெரிவித்து விட்டு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை. ஆனால் பீரோவில் பேப்பரில் மடித்து வைத்திருந்த தங்க சங்கிலிகள், மோதிரம் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் அப்படியே இருந்தன. அதனை மர்மநபர்கள் எடுத்து செல்லவில்லை. அதனை போலீசார் வல்லவராஜின் பெற்றோரிடம் கொடுத்தனர். மேலும் போலீசார் வல்லவராஜிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளும், ரூ.1 லட்சம் ரொக்கமும் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் சரக குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் மலைச்சாமி, காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வல்லவராஜ் பீரோவின் கதவை பூட்டாமல் உள்ளே இருந்த பெட்டியை மட்டும் பூட்டி சாவியை துணிகளுக்கு இடையே வைத்து விட்டு சென்றுள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சாவி இருப்பது தெரியாமல், பெட்டியை அரிவாளை வைத்து வெட்டி ஓட்டை போட்டு, உள்ளே கம்பியை வைத்து நெம்பி பெட்டியை திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர். வல்லவராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. அவர் வந்த பிறகு தான் எவ்வளவு நகை- பணம் என்பது கொள்ளை போனது என்பது முழுமையாக தெரியவரும். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷாமிலியின் திருமணத்திற்காக வல்லவராஜ் மாப்பிள்ளை பார்த்து வருகிறார். மகளின் திருமணத்திற்காக வல்லவராஜ் இவ்வளவு நகைகளை சேர்த்து பீரோவில் வைத்திருந்ததாக அவருடைய தந்தை ஜேம்ஸ்சவரிநாதன் போலீசாரிடம் தெரிவித்தார்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார், வல்லவராஜ் வீட்டின் எதிரே உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில், நேற்று அதிகாலை 2.40 மணிக்கு லுங்கியும், அரைக்கை சட்டையும் அணிந்திருந்த 2 நபர்கள் நடந்து வருவதும், அதில் ஒருவன் மட்டும் வல்லவராஜின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை-பணத்தை கொள்ளையடித்து லுங்கியில் போட்டு கொண்டு, அதிகாலை 2.57 மணிக்கு வெளியே வருவதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டமாக சேர்ந்து அவர்களை பார்த்து குரைப்பதும், அதனால் அவர்கள் 2 பேரும் வேகமாக நடந்து சென்றதும், பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் அவர்கள் திரும்பி ஓடுவதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த காட்சிகளில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் உருவத்தை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலக்கரை குற்றப்பிரிவு போலீசார் வல்லவராஜ் வீட்டின் முன்பு தான், வீட்டில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், வீட்டை பூட்டி விட்டு நீண்ட நாட்களுக்கு வெளியூருக்கு சென்றால் வீட்டின் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். அப்போது வல்லவராஜிடமும் துண்டு பிரசுரம் வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் வெளியூர் சென்ற விவரத்தை போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் இந்த கொள்ளை சம்பவம் நடைபெறாமல் தடுத்து இருக்கலாம் என்று போலீசார் கூறினர். வல்லவராஜின் வீடு கடந்த 15 நாட்களாக பூட்டப்பட்டிருந்ததால் இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.