கனமழை அறிவிப்பு: அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்

கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதையொட்டி அனைத்து துறை அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2017-09-02 00:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தனது இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

செப்டம்பர் 1–ந் தேதி முதல் வருகிற 5–ந் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக 3–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்து துறைத் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து தயாராக இருக்க வேண்டும்.

இதுதொடர்பாக துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டதா? எனத் தெரியவில்லை. கூட்டாக முயன்றால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். பொதுமக்களும் சுய உதவிக்குழுக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கனமழையை சமாளிக்க ஏதுவாக அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும்.

மூத்த அதிகாரிகளும், இளையவர்களுடன் களத்துக்கு சென்று ஆய்வு செய்ய தயாராக இருக்க வேண்டும். அனைவரும் தங்களுக் குரிய வயர்லெஸ் கருவிகளைக் வைத்திருக்க வேண்டும். போலீசார் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான பணிகளை மேற்கொள்வார்கள். பேரிடர் மேலாண்மை துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல் திட்டம் வகுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்