முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
விவசாயிகளை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் என்று ஈஷா யோகா மைய சத்குரு ஜக்கி வாசுதேவ் 1 மாதம் நடைபயணம் செல்கிறார். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. அதே நேரத்தில் நதிகள் தேசியமயமாக்கப்படும்போது தான் நதிகளை காக்க முடியும். மீட்க முடியும். விவசாயிகள், பொதுமக்கள் நதிகளை பயன்படுத்த முடியும். நடைபயணத்தின்போது 16 முதல்-மந்திரிகளை சந்திக்கும் அவர், இறுதியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைக்க வேண்டும். 25 மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இப்போது நதிகளை தேசியமயமாக்குவது சாத்தியமான ஒன்றாகும்.
வருகிற 15-ந் தேதிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பயிர்க் காப்பீட்டு தொகை பெற்றவர்கள் விவரம், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு விவரப்பட்டியலை வைக்க வேண்டும். இல்லையெனில் 15-ந் தேதிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். பருவமழை பெய்தால் தான் சாகுபடி நடைபெறும் சூழ்நிலை வந்துவிட்டது. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் அகதிகளாக வெளியூருக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகளை பற்றியும், மக்களை பற்றியும் தமிழகஅரசு கவலைப்படவில்லை. செயல்படாத அரசாக தமிழகஅரசு உள்ளது.
தமிழகத்தில் அரசியல் நிலை கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழர்கள் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகள், மக்களுக்காக பணியாற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும். இல்லையென்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் பாலன், மாவட்ட தலைவர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.