திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள ஜமீன்கொரட்டூரை சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மனைவி அன்னம்மாள் (வயது 58).
திருவள்ளூர்,
இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அன்னம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்த அன்னம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் குமாரபுரத்தை சேர்ந்த தங்கராஜேஷ் (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.