விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2017-09-01 22:45 GMT
சென்னை,

தெலுங்கானா மாநிலம் ஓங்கல் பகுதியை சேர்ந்தவர் எல்லையப்பா. இவருடைய மகன் சஞ்சய் (வயது 19). இவர் சென்னை பூக்கடை குடோன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி சுற்றுவட்டார பகுதியில் பிளம்பராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் துறைமுகம் பகுதியில் இருந்து பட்டினப்பாக்கம் கடலில் கரைப்பதற்காக விநாயகர் சிலை மாட்டுவண்டியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

அந்த மாட்டு வண்டியில் சஞ்சய் சென்றார். மயிலாப்பூர் அருகே சென்றபோது மாட்டுவண்டியில் இருந்து சஞ்சய் கீழே இறங்கினார். பின்பு மாட்டு வண்டியில் ஏற முயற்சித்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவரது நெஞ்சு பகுதியில் மாட்டு வண்டியின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இது அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்