நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது

மாநில பாடத்திட்ட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-09-01 22:45 GMT

பொள்ளாச்சி,

மாநில பாடத்திட்ட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ், துணை செயலாளர் கார்த்திகேயன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பிரபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மகாலிங்கம், காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் அன்சர், ம.தி.மு.க.நகர செயலாளர் துரைபாய். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் அன்பரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சண்முகம், தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் செல்லத்துறை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 இந்த நிலையில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் 50 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்