70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; வாலிபர் கைது
தேவிபட்டினத்தில் 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிபட்டினத்தில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதாக தேவிபட்டினம் மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல்படை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் போஸ் தலைமையிலான போலீசார் நயினார்கோவில் விலக்கு சாலை அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 70 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை கொண்டு வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கொண்டு வந்த தேவிபட்டினத்தை சேர்ந்த முகமது பாரூக் மகன் ஜெபின் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.