சாலை விரிவாக்கத்திற்காக 120 மரங்களை அகற்றும் பணி மும்முரம்
சரவணம்பட்டி பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக 120 மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சரவணம்பட்டி,
கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சரவணம்பட்டி பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதைத்தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் விபத்து பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சரவணம்பட்டி பகுதிகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விபத்து பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி செலவில் சரவணம்பட்டி துடியலூர் பிரிவு- சிவானந்தாமில் பகுதி வரை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் முதற் கட்டமாக சரவணம்பட்டி துடியலூர் பிரிவில் இருந்து பெருமாள் கோவில் வரை சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து அம்மன் கோவில் அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த தரைப்பாலத்தின் இருபுறமும், 60 அடி அகலத்திற்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. இறுதிக்கட்டமாக சரவணம்பட்டி துடியலூர் பிரிவில் இருந்து சிவானந்தாமில் வரை 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சத்தி சாலையில் சுமார் 120 மரங்கள் உள்ளன. அந்த 120 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளது. இதில் 15 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வேறு இடங்களில் நடப்பட்டன. மீதமுள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எனவே இந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மரங்களை வெட்டுவதற்கு ஏதுவாக மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து மின்சார வயர்கள் மரங்களில் படாதவாறு சீர்செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள இடங்கள், வீடுகளுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.