நிலத்தகராறில் மோதல்: பெண்கள் உள்பட 5 பேர் கைது

தேனி அல்லிநகரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த இருவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

Update: 2017-08-31 21:15 GMT

அல்லிநகரம்,

தேனி அல்லிநகரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிச்சை (வயது 67). அவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சதாசிவம் (67). இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் பிச்சை வீடு கட்டி கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் 2 தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ஒருவரையொருவர் தாக்கினர். இது தொடர்பாக அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பிச்சை கொடுத்த புகாரின் பேரில் சதாசிவம், அவருடைய மனைவி பாக்கியம் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பாக்கியம் கொடுத்த புகாரில் பிச்சை, அவருடைய உறவினர்கள் மாடசாமி, பாண்டியம்மாள் ஆகியோர் கைதானார்கள்.

மேலும் செய்திகள்