நாகர்கோவிலில் டெம்போ மோதி கட்டிட காண்டிராக்டர் சாவு
நாகர்கோவிலில் டெம்போ மோதி கட்டிட காண்டிராக்டர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில்,
நாகர்கோவில் குருசடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63), கட்டிட காண்டிராக்டர். இவர் நெல்லையில் ஒரு கட்டுமான பணியை காண்டிராக்ட் எடுத்து வேலை செய்து வந்தார். இதன் காரணமாக தினமும் நெல்லை சென்று வந்தார். இதுபோல் நேற்று காலையில் நெல்லை செல்வதற்காக வீட்டில் இருந்து வடசேரி பஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் வந்துகொண்டு இருந்தபோது, பின்னால் வந்த ஒரு டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜ் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய டெம்போவை விபத்து நடந்த இடத்திலேயே டிரைவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே போலீசார் டெம்போவை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
விபத்து நடந்த இடத்தின் அருகே கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதில் விபத்து ஏற்பட்ட காட்சியும், தப்பி ஓடிய டிரைவரின் அடையாளமும் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.