மதுரை– சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது

ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் மதுரை–சென்னை இடையே புதிதாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2017-08-30 23:15 GMT

மதுரை,

ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் மதுரை–சென்னை இடையே புதிதாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு 3.55 மணிக்கு மதுரை வரும். மதுரையில் இருந்து மாலை 4.35க்கு புறப்பட்டு 6 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த புதிய விமான சேவை தொடக்க நிகழ்ச்சி மதுரை விமான நிலையத்தில் நேற்று பகல் 2 மணியளவில் நடந்தது. விமானத்தில் சென்னை சென்ற பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து மதுரை வந்த பயணிகளுக்கு, மதுரை விமான நிலைய ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ஷாஜகான், அலுவலர்கள் வரவேற்றனர்.

புதிய விமான சேவை தொடங்கியதையொட்டி நேற்று காலை 10 மணியளவில் சைக்கிள் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் பெருங்குடியில் இருந்து புறப்பட்டது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மத்திய தொழில்பாதுகாப்புபடை கமாண்டர் ஷா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு விமானநிலையத்தில் முடிவடைந்தது.

மேலும் செய்திகள்