போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுவை போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-08-30 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 100 அடி சாலையில் உள்ள புதுவை போக்குவரத்துதுறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் மது தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் முருகன் உள்பட 100க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

எப்.சி. எடுக்கவும், உரிமத்தை புதுப்பிக்கவும் காலதாமத கட்டணம் பலமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும், பெரிமிட் மற்றும் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யும் போது காலதாமதம் ஏற்படுகிறது. இதனை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்