போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் ராணுவத்தில் சேர முயன்ற வாலிபர் கைது
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
மதுரை,
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த சில நாட்களாக ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த சோமு (வயது 19) என்பவர் கலந்து கொண்டார். அவர் கொடுத்த 10–ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, அது போலி என்பது தெரியவந்தது.
இது குறித்து தல்லாகுளம் போலீசில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பிரிவு அதிகாரி விக்ரம் டோக்ரா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமுவை கைது செய்தனர்.