அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரை சூட்ட வேண்டும்

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவனைக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரை சூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேட்டி

Update: 2017-08-23 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டில் தற்போது பெய்துள்ள மழையால் மகிழ்ச்சியடைந்தாலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரூர் பகுதியில் அணை கட்டி உபரீநீரை பயன்படுத்த காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிவித்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் தமிழக அரசு அவர் அறிவித்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை நன்கு தூர்வாரினால் மழை நீர் பெருகும். அது விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் பெயரை சூட்ட வேண்டும்.

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் தமிழக அரசு முத்துலெட்சுமி ரெட்டி பெயரில் உள்ள மருத்துவமனையை மாற்றம் செய்ய கூடாது. ரூபாய் நோட்டு மாற்றத்தால் 6 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இது மோடியின் தவறான பொருளாதார கொள்கை. முத்தலாக் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் பா.ஜ.க. காவிரி விவகாரத்தில் உச்ச நீதின்ற தீர்ப்பை ஏன் வரவேற்று செயல்படுத்த மறுக்கிறது. நீட் தேர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக நலன் சார்ந்த திட்டங்களை முடக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது.

ஜி.எஸ்.டி.யில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு எதிர்க்கவில்லை. ஸ்டாலின் தமிழகத்தின் ஒரு பலமான கட்சியின் செயல் தலைவர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்