கோவை ஜி.பி. சிக்னல் பகுதியில் 63 அடி உயரத்துக்கு கட்டப்படும் 2-வது கட்ட மேம்பாலம்
கோவை ஜி.பி. சிக்னல் பகுதியில் 63 அடி உயரத்துக்கு கட்டப்படும் 2-வது கட்ட மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது சாத்தியமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கோவை,
கோவை காந்திபுரத்தில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ரூ.195 கோடி செலவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி கோவை நஞ்சப்பா சாலையில் மத்திய சிறை முன்பு இருந்து தொடங்கி ஆம்னி பஸ் நிலையம் முன்பு முடியும் வகையில் ஆயிரத்து 700 மீட்டர் நீளத்துக்கு முதற்கட்டமாக பாலம் அமைக்கப்பட்டது.
இதன் கட்டுமான பணிகள் முடிந்து தற்போது வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் முதல் கட்ட மேம்பாலத்தின் மேல்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்ட மேம்பால பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது கட்ட மேம்பாலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக உயரமான கம்பங்களில் கொண்டு செல்லப்பட்ட உயர் அழுத்த மின்கம்பிகள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டன. அதன்பின்னர் 2-ம் கட்ட மேம்பால பணிகள் தொடங்கின. கோவை 100 அடி சாலையில் 5-வது குறுக்கு தெரு முன்பிருந்து தொடங்கும் இந்த மேம்பாலம் பாப்பநாயக்கன்பாளையம் மின்சார சுடுகாடு வரை சுமார் ஆயிரத்து 700 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதற்காக 55 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கோவை நஞ்சப்பா சாலையில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் பூமியிலிருந்து 33 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. அதற்கு மேல் ஜி.பி. சிக்னல் பகுதியில் அமைக்கப்படும் 2-ம் கட்ட மேம்பாலம் பூமியிலிருந்து 63 அடி உயரத்தில் கட்டப்படுகிறது.
இதற்காக ஜி.பி. சிக்னல் பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள முதல் கட்ட மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் சென்னை மெட்ரோ ரெயிலுக்காக அமைக்கப்படும் பிரமாண்ட கான்கிரீட் தூண்கள் போன்று பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தூண்கள் ஒவ்வொன்றும் 55 அடி உயரம் உள்ளது. அதற்குமேல் கான்கிரீட் உத்திரங்கள் போடப்பட்டு 63 அடி உயரத்தில் பாலம் அமைய உள்ளது. இந்த பாலம் 7½ மீட்டர் அகலத்தில் இரண்டு வழி பாதையாக அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு திசையிலும் ஒரு பஸ் செல்லும் வகையில் இது இருக்கும்.
கோவையில் பிரமாண்டமாக அமைக் கப்பட்டு வரும் இந்த பாலம் குறித்து பொது நல அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
வாகனங்களை ஓட்டுவது சாத்தியமா?
ஜி.பி.சிக்னல் பகுதியில் வளர்ந்து வரும் இரண்டாவது கட்ட மேம்பாலம் 63 அடி உயரத்தில் அதாவது 5 மாடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. தமிழகத்திலேயே இவ்வளவு உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு சில பாலங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாலத்தின் மீது இரு சக்கர வாகனங்கள் ஏறுவது சிரமம்.
அந்த உயரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுத்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஓட்டுவது என்பது சாத்தியமாகுமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கார் போன்ற வாகனங்களில் செல்பவர்களும் அவ்வளவு உயரமாக உள்ள பாலத்தில் செல்லும் போது ஏதோ மலை மீது வாகனம் ஓட்டும் உணர்வை ஏற்படுத்தும். எனவே மிகவும் உயரமாக கட்டப்படும் இந்த பாலத்தில் காற்று பலமாக வீசும் போது அதை எதிர்த்து வாகனங்களை ஓட்டுவது என்பது சவாலாகத்தான் இருக்கும். அது போகபோகத்தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.