பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்ட அனைத்துக்கட்சி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகைள வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-08-16 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அனைத்துக்கட்சி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், 100 சதவீதம் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகைள வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளருமான குணசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச்செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாவட்ட தலைவர் அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் ஆதிமூலம், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திருமொழி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்