விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் 24–ந் தேதி நடக்கிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும். அதன்படி இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வருகிற 24–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.